பாக்டீரியா தொற்றுகளைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய மருந்துகளாக ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் உள்ளன. ஆனால், தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், குடலில் செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இந்த மருந்துகள் பாதிக்கக்கூடும். இதனால் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் இயல்பான சமநிலை மாறி, சிலருக்குச் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் காலத்திலும், சிகிச்சை முடிந்த பிறகும் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், அதிக வாயுத் தொல்லை, […]

காலையில் எழுந்ததும் முதலில் டீ குடித்தால்தான் பலருக்கும் அன்றைய நாள் தொடங்கிய உணர்வு ஏற்படும். பால் டீ, மசாலா டீ என விருப்பத்திற்கேற்ப குடிக்கும் இந்தப் பழக்கம் பலரின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிவிட்டது. தூக்கக் கலக்கத்தைப் போக்கவும் புத்துணர்ச்சி பெறவும் வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்கள் ஏராளம். ஆனால், காலையில் எதுவும் சாப்பிடாமல் டீ குடிப்பது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. சிலருக்கு இது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்தல், நெஞ்செரிச்சல், குமட்டல் […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது, நார்ச்சத்து குறைவான உணவுகளை தேர்வு செய்வது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் உடல் எடையில் மட்டுமல்லாமல், செரிமான அமைப்பிலும் தெரிய ஆரம்பிக்கலாம். அடிக்கடி வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள், தினசரி உணவில் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. […]

ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் பல வீடுகளில் காலையுணவாக இருந்தது பழைய சாதம். முந்தைய நாள் மீதமிருந்த சாதத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் இந்த வழக்கம், இன்று மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நொதித்த (Fermented) உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பழைய சாதத்தின் ஊட்டச்சத்து குறித்தும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பாரம்பரிய உணவு உடலுக்கு என்னென்ன நன்மைகளை […]