கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவ மனைகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டானைச் சேர்ந்த என்.ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், […]

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]

சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சொத்துக்கள் பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தின் சொத்துக்களை, சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு இடையே பிரித்து வழங்கும் முறையாகும். இது பொதுவாக குடும்பச் சொத்துக்களுக்குப் பொருந்தும், மேலும் இது ஒரு உடன்படிக்கை பத்திரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. […]