தாம்பரத்தில் உள்ள நன்மங்கலம் ஏரி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மனுவை, அப்பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில், நீர் நிலத்தில் […]

திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் […]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் […]

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]