ஹைதராபாத் அருகேயுள்ள மெட்சல் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் துயரமாக மாறியது. அதிக அளவில் மது அருந்தியதன் காரணமாக 53 வயதான ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஜகத்கிரிகுட்டா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பவானி நகரில் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீன் மற்றும் பிரியாணியுடன் மது […]

டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை […]

சவுதி அரேபியாவின் மதினாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மற்றொரு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த விமானம் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் வழியில் இருந்தது. ஆனால்,நடுத்தர வானில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததால், அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன. விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் […]

சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 42 இந்திய யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது சவுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான […]

சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]

ஹைதராபாத்தில் 2 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூசி ஆற்றில் வீசிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக பேக் செய்து, அவற்றை 3 முறை ஆற்றில் வீசியுள்ளார்.. பின்னர், தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரிக்கு போன் செய்தார். ஆனால் […]