ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியை அழிப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஈரான் சமீபத்தில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையை ஒரு கொடிய கிளஸ்டர் குண்டால் தாக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டு என்றால் என்ன? கிளஸ்டர் குண்டு என்பது ஒரு […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைவது பற்றிப் பேசி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, மேலும் இது தொடர்பாக அமெரிக்காவும் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரத்தில் சேருவதா இல்லையா என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வார் […]

ஈரான் கடந்த ஆண்டில் மட்டும் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]

இஸ்ரேலுடன் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக, ஈரான் அரசு தனது குடிமக்களை வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது முற்றிலும் கோபமாக உள்ளார். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சரணடையுமாறு ஈரானுக்கு டிரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார். ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. […]

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]