இஸ்ரேல் -ஈரான் போர் தொடர்பான நேரலை நிகழ்ச்சியின் போது அலுவல கட்டிடத்தின் மீது இஸ்ரேல் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். கட்டிட கூரை சேதமடைய தொடங்கியதை அடுத்து நெறியாளர் உடனடியாக ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரானில் உள்ள ஈரானின் அரசு தொலைக்காட்சி IRIB கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. செய்தி தொகுப்பாளர் ஒருவர் இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக […]

ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும். தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என […]

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு தடையாக கருதி, ஈரான் அவரைக் கொல்ல இரண்டு முறை முயற்சி செய்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் , ஈரானில் உள்ள இந்திய தூதரகம் பல உதவி எண்களை வெளியிட்டுள்ளது மற்றும் தற்போது ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஒரு டெலிகிராம் இணைப்பையும் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் […]

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் […]

இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் […]

ஈரானின் 8 நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை குறைவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் அழிவடைந்துள்ளன. இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் ரைசிங் லயன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காசா தற்போது எங்களுக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் மத்தியில் உள்ளது, ஈரான் உண்மையில் இதில் ஈடுபட்டுள்ளது, மேலும் காசாவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். பணயக்கைதிகளை […]