fbpx

நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நடைப்பயிற்சி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி உங்களை கட்டுக்கோப்பாக வைக்கிறது. ஆனால் பல சமயங்களில் நடைப்பயிற்சியின் போது சோம்பேறித்தனமாகி நடுவில் விட்டுவிடுவார்கள். உங்கள் நடைப் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

ஒரு நேரத்தைத் திட்டமிடுங்கள் : காலையில், மதிய உணவு இடைவேளையின்போது …

காலை உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பொருட்கள் இருக்க வேண்டும். தினமும் காலையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக குளிர்கால நாட்களில் முட்டைகளை உண்ண வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது …

குழந்தை வளர்ப்பு என்பதே மிகவும் சவாலான ஒன்றாக மாறிவிட்டது. நம் தாத்தா பாட்டி காலத்தில் ஒரு வீட்டில் 10 – 12 குழந்தைகளை கூட எளிதாக வளர்த்தனர். ஆனால் தற்போது ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதே சிக்கலான பணியாக மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு பொறுமை என்பதே குறைவாக உள்ளது. மேலும் பிடிவாத குணம் அதிகரித்துள்ளது.

ஆனால் …

மோசமான வாழ்க்கை முறையால் மக்கள் இன்று பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் இதில் அடங்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் பெரிய ஆபத்து உடலில் அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக எழுகிறது. இதைத் தவிர்க்க, இதுபோன்ற பல விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்,

இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தத் தொடங்குகிறது. …

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமாக உள்ளார்,. அவரது ஆரம்பகால மாடலிங் நாட்களில் இருந்து பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தது வரை, அவரின் புகழ் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அக்டோபர் 13 அன்று அவரது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவரது நிகர மதிப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை …

சியா விதை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால், நாம் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, இது உடல் எடையை குறைக்கும் ஒருவகை விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தினசரி சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் பல்வேறு வகையான மாற்றங்களையும் உங்களால் உணர முடியும்.

குறிப்பாக, பெண்கள்

ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனுடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான உணவு வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது. ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றது.

இவற்றில் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை …

பொதுவாக உடலில் சாதாரண சளி காய்ச்சல் முதல் பல நோய்களும் வந்து விட்டால் மருத்துவர்கள் முதல் பலரும் அறிவுறுத்துவது தண்ணீரை சுட வைத்து வெதுவெதுப்பாக அருந்த வேண்டும் என்று தான். ஆனால் இவ்வாறு வெந்நீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஒரு சில பாதிப்புகள் உண்டாகும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் தினமும் …

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லை என்றால் அவை உடலில் பல்வேறு நோய்த்தாக்குதல்களை ஏற்படுத்தும். இதுபோல வைட்டமின் சத்துக்கள் உடலில் குறையும் போது நோய் பாதிப்புகள் உடலில் உருவாகும் என்பதால் பலரும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே வைட்டமின் சத்துக்களை  கொண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். உணவின் மூலமே இந்த குறைபாட்டை சரி …