மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்த பனையன் (45) மற்றும் அவருடைய உறவினர்களான வீரணன், கருவாமொண்டி உள்ளிட்டோர் கடந்த 3ஆம் தேதி அந்த அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். மது குடித்த பிறகு பனையன் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கமாக நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி […]

மதுரை ஆத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த பாண்டிச்சேரி என்பவர் கணவரை தெரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் கரிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலயத்தில் வேலை பார்த்ததால் அந்த பகுதியிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் அப்போது அவருடைய வீட்டின் அருகே வசித்த கண்ணன் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கண்ணன் மீது கொலை அடிதடி போன்ற வழக்குகள் இறுதியில் இருக்கின்ற நிலையில் […]

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி மதுரைக்கிளையில் நீதிமன்ற […]

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற இளம் பெண்ணுக்கும், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞருக்கும் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில், […]

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக சையது தாஹிர் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஆசிரியர் உட்பட 41 மாணவிகள் பாலியல் ரீதியான புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது […]

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த தனியார் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தனர். அந்த சோதனையில் […]

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அபிநந்தனா 15 தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்வண்டி மூலமாக நேற்று காலை சென்னை திரும்ப திட்டமிட்டது. வந்தனர் விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து […]

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (22). மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவருடைய தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், ஆனந்தகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தெற்கு வாசல் பகுதி அருகே பயணமாகி கொண்டு இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து இருக்கிறது. […]

எப்போதும் கோடை காலமான சித்திரை மாதத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், பகல் சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் கூட மாலை சமயத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது. இத்தகைய நிலையில், மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிறைவு பெறுவதால் இன்னும் 2 தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது அல்லது கனமழை தமிழகத்தில் பெய்யக்கூடும் […]

மதுரை எஸ் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அங்காளம்மாள் (60). கடந்த 4ம் தேதி திருவிழா பார்ப்பதற்காக சென்ற சமயத்தில் எஸ்பி பங்களா அருகே அவருடைய 4 பவுன் நகை திருடு போனது. அதோடு ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சித்திரை திருவிழா பார்ப்பதற்காக சென்ற தல்லாக்குளம் இந்திரா நகரை சேர்ந்த சங்கரேஸ்வரிடம் 7 பவுன் நகையும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே அதே 4ம் தேதி புதூரை சேர்ந்த […]