2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் […]

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற முக்கியமான இடமாக திகழ்கிறது. சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் இத்தொழில் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. பட்டாசு தொழில் மாநில பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் இந்தத் துறையில் நிகழ்கிறது. ஆனால், வருமானம் உயர்ந்திருந்தாலும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் நிகழ்கின்றன. இது தொழிலாளர்களின் உயிர்களையும், குடும்பங்களின் வாழ்வையும் […]

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை […]

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]

பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், ‘மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் கடந்த ஆண்டு அளித்தது. மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி […]

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் […]

நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.. […]