குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, தேர்தல்களை நடத்துவது என […]

சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில; சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து […]

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் […]

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவின் மூலமாக […]

ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் […]

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. 2023-ம் ஆண்டு, ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு […]

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் இங்கு விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தமளிக்கும் […]

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. […]

வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட […]

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; […]