கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹூக்ளியில் வெள்ளிக்கிழமை இரவு தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், தாரகேஸ்வரில் உள்ள ஒரு ரயில்வே கொட்டகையில் கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக ஹூக்ளி கிராமப்புற காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். […]