திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் […]

உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை […]