செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]