குடிபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்து சடலத்தின் அருகே இரவு முழுவதும் தூங்கிய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த […]

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்யமூர்த்தி & கோ என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணியின் காரணமாக, அங்கே கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை அவ்வப்போது மாயமானதாக கூறப்படுகிறது. ஆகவே இங்கு வந்து பொருட்களை திருடிச் செல்வது யார் என்று தெரியாமல் கட்டிட பணியாளர்கள் முதல் கொண்டு ஒப்பந்ததாரர் வரையில் மிகுந்த குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் திருட்டை எப்படியாவது […]

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் 2 குடும்பங்களுக்கிடையே சொத்து தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட தகராறுகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற வளாகங்களை தான் மக்கள் நாடி வந்தார்கள்.ஆனால் நீதிமன்ற வளாகங்களை நாடினால் அவர்களுக்கான தீர்வு உடனே கிடைத்துவிடாது. குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இது போன்ற சிவில் வழக்குகளில் விசாரணை நடைபெறும். நீதி என்றாலே தாமதமாக தான் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. காரணம், ஒரு தவறு நடைபெற்றிருந்தால் அது எப்படி நடந்தது, யாரால் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வளவு கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவற்றை தாண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்க தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் இது போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நடந்தால் கூட ஒரு வகையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தன்னுடைய சொந்தங்கள் மூலமாகவே […]

தற்போது நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப்போகும் மூதாட்டி வரையில் அனைவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது.ஆனால் இந்த செல்போன் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, பல தீமையான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. அதனை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது நல்லதும், கெட்டதும். அதனை பலரும் இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த செல்போனால் சமூகத்திற்கு நல்ல விளைவுகள் ஏற்படுகிறதோ இல்லையோ தீய விளைவுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அதிலும் […]

தமிழகம் தற்போது கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அதற்கேற்றார் போல நாள் ஒரு வண்ணமும், பொழுது ஒரு மேனியமாக தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில், சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள மேடவாக்கம் சந்திப்பில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று இருக்கிறது. இந்த […]

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது, அந்த தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியில அமர்ந்தது.திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த போகிறோம் என்று தெரிவித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.அதற்கேற்றார் போல தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு போதை பொருள் உபயோகத்தை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் இவை நடைபெறுவதற்கு முன்னால் கூட தமிழகத்தில் போதை பொருள் […]

சமீப காலமாக கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பலர் யோசித்துச் செய்யும் பல விசித்திரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.. விதவிதமாக யோசித்து கொலை செய்து அந்த கொலையை மறைப்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்களேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின பெண் ரூபிகா என்பவருக்கும், அந்த பகுதியில் வசித்து வரும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் […]

அரசியல்வாதிகள் ஏதாவது சாதனை படைத்தால் அதனை பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாடுவார்கள். அல்லது யாராவது ஒருவர் 100 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு ஒரு விழாவை எடுத்து அவருடைய வாரிசுகள் கொண்டாடுவார்கள். ஆனால் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடுவதற்காக செல்லும் போது அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளிகள் அவர் 100வது திருட்டை செய்யப் போவதாக போஸ்டர் அடித்து திருவெங்கிலும் ஒட்டி அமர்க்களம் படுத்தியிருப்பார்கள்.அப்படி ஒரு சம்பவம் கோவையில் […]

தற்போதைய இளைஞர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல பெண்களுடன் திருமணத்தை தாண்டிய உறவை வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஏகப்பத்தினி விரதன் என்ற பழமொழி எல்லாம் ராமர் காலத்தோடு முடிவடைந்து விட்டது. தற்போது கட்டிய மனைவி ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டிவிட்டால் வேறு ஒரு பெண்ணை சர்வ சாதாரணமாக தேடி சென்று விடுகிறார்கள். […]