ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக் கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட […]

தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னை, புதுச்சேரி, […]

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை […]

புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரியில் முதலில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை […]

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார். துணை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இன்று ஜிப்மர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, துணை ஜனாதிபதி இங்குள்ள மத்திய நிர்வாக ஜிப்மரில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் […]