மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர், நீதிமன்றம் […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள், விமான ஊழியர்கள் என 240க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய விமானத்துறையின் வரலாற்றில் மீண்டும் கரும்புள்ளி வைத்தது போல் மாறிவிட்டது. இப்பெரும் துயரச் சம்பவத்தின் இடம் இன்னும் சிதைந்த உலோகங்களும் புகை மூட்டத்துடனும் இருக்க, மீட்பு படையினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். […]

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, அண்மைக்காலமாக இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரின் இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு படைகளின் நேர்மைக்கு கேள்வி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து […]