fbpx

ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொங்கல் பண்டியை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதையை …

பொங்கல் பரிசுக்கான டோக்கன் தயார் நிலையில் உள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய …

மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 …

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியது. இங்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொது மக்களின் வீடு மற்றும் உடைமைகளும் கனமழையால் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை …

டோக்கன் கிடைக்க பெறாத மற்றும் ரேஷன் கார்டு இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. …

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று …

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாட்டில் பொது …

ரேஷன் கார்டு தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. …

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று …

ரேஷன் கார்டு நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இந்த அட்டைகளை பயன்படுத்தி அரசு ரேஷன் கடைகளில் பொருட்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது.

இந்த ரேஷன் கார்டில் ஒவ்வொரு வருடமும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய …