மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான பிரதமரின் உணவு தானியத் திட்டம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், செயல்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் தானிய […]
ration shop
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர் […]
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக நாளை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்தில் குறைதீர் முகாம்கள் நடத்தபடுமென அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள மக்கள் வரும் 10ம் தேதி மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி […]
நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் மத்திய அரசு அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இதைத் தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமான அசாம், இந்த ஆண்டு செப்டம்பரில் திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது. […]
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் அல்லது சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் […]
ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]
நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் […]
வரும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக அரசு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான தொகை அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]
1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 விற்பனையாளர்கள் […]
தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கவும், ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் […]