அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலிகள் மீதான ஆய்வக சோதனைகளில் புற்றுநோயை முற்றிலுமாகத் தடுக்கும் ஒரு “சூப்பர் தடுப்பூசி”யை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துகிறது, இது அசாதாரண செல்களை அடையாளம் கண்டு அழிக்க உதவுகிறது, புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. சோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட எலிகள் பல மாதங்கள் ஆரோக்கியமாக இருந்தன, அதே நேரத்தில் தடுப்பூசி இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இந்த […]

தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]

விஞ்ஞானிகள், நாம் வாழும் பூமியை எவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் பராமரிக்கலாம் என்று யோசனை செய்வதை விட , பூமியை போன்று மனிதர்கள் வாழ வேறு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா என்பதைதான் அதிகமாக ஆராய்ந்து வருகின்றனர். பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர் . இந்த ஆராய்ச்சிகள் சமீப காலத்தில் தொடங்கப்பட்டவை அல்ல. பல […]

இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]

காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]

உங்களுக்கு இருதய நோய் இருந்தால், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிரமான இதய நோய்களை தடுப்பதற்காக, இரத்தம் கட்டியெடுக்காமல் ஓடச் செய்யும் மருந்துகள் உண்டு. அதில் ஆஸ்பிரின் குறைந்த அளவில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பிரின் என்பது இரத்தப்பிளேட்லெட்டுகள் (platelets) ஒன்றிணைந்து இரத்தக் கட்டிகளை உருவாக்குவதை தடுக்கும் செயல்பாட்டை கொண்டது. இதனால் […]

பூமியின் பெருங்கடல்கள் கடந்த இருபது ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன, குறிப்பாக அவை இருண்டு வருகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Global Change Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் கடல்களில் 21%க்கும் அதிகமான பகுதி, சுமார் 75 மில்லியன் சதுர கிலோமீட்டரைத் தாண்டும் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அளவில் இருண்டு (darkening) காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் […]