fbpx

இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16ஆம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது பேசுகையில், 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4 …

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் …

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நவ.16அம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் முடக்கப்படுகிறது. மதுரையில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடைத் …

”நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி தான். …

சென்னையில் நடைபெற்ற விமானப்படை கண்காட்சியை காண வந்திருந்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டோர் …

ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை நடித்து முடித்து தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரியதாக உள்ளதால், அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் …

”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும்” என்ற திடீர் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

திமுக …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாட்டு பயணத்திற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது. இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் …

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி …