மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் […]

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் […]

“பாஜக தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 வரை தாமதப்படுத்தியுள்ளது, இதன் மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 க்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த பிறகு, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான எம்.கே. ஸ்டாலின், 2026 க்குப் […]