தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ஆம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும். …