கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற குரு பௌர்ணமி விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆன்மீக ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது முடிந்தது. இதில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

அஜித்தை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதை நேரில் பார்த்த சிறுவன் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த […]

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை […]

தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]