அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை …
Tamil Nadu
தமிழ்நாடு புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “இன்றும் நாளையும் (பிப்ரவரி 24, 25) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதேசமயம் இன்று முதல் பிப்ரவரி 26ஆம் தேதி …
CM Stalin: மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி வழங்கினாலும், தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy ) அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடலூரில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு …
Safety corridors: தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15வது எடிஷன் பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு …
பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்ணை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், தமிழ் நாட்டை சேர்ந்த 37 வயது பெண் பெங்களூரு கேஆர் மார்க்கெட் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது …
மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள தேனூர் கிராமத்து மக்கள். மதுரை மத்திய பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 450 ஆண்டுகளாக புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் …
தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு எதிரான 2002 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், கடந்த 2002ம் ஆண்டு, அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக …
Accident: நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 2021ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் …
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 …
நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது.. ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய் கடந்து விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையிலும், கதிகலங்கியும் போயுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நடுத்தர மற்றும் எளிய மக்கள் அதிகமாக …