சுபமுகூர்த்த நாளான 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான 27.10.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் […]

நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு […]

பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு […]

அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]

சுபமுகூர்த்த நாளான வரும் 24 மற்றும் 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 மற்றும் 27.10.2025 […]

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் […]

தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய […]