கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் […]

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி வரும் 09.08.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் […]

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை […]

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், […]

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான கோரிக்கைகளை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள். ஓய்வூதியம் […]

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்து வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி […]

ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும் பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20,000-க்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் […]