44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]

தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களைமுறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன்‌ புலன்‌ விசாரணை செய்வது, 60 நாட்களில்‌ […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களிடையே தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டுதோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, […]

வரும் 30ஆம் தேதி உடன் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடுத்த தலைமைச் செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹேண்ட்ஸ் ராஜ் வர்மா வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரியும் எஸ் கே பிரபாகர், […]

தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி சங்கர் ஜிவால் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம் அவர் சென்னை […]

பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை 2023-2024 ஆம்‌ ஆண்டு மாணக்கர்கள்‌ சேர்க்கைநடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்‌பள்ளியானது தருமபுரி செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசுமேல்நிலைபள்ளி வளாகத்தில்‌ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல்‌ 5ம் வகுப்பு வரை […]

விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ […]

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கும் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் […]

தமிழகத்தில் இருக்கின்ற 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் உடனடியாக மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மின்சாரம் மதுவிலக்கு […]