ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]

காவல்துறையில் 25 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பெற்றதாக பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் பதவி உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தலைமைக் காவலர் பதவியில் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, மொத்தம் 25 ஆண்டுகள் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் தலைமைக் காவலர்களை பதவி உயர்வு வழங்கப்படும். நகரங்களில் உள்ள ரேஞ்ச் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்கி, வழிகாட்டுதல்களை […]

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு. வெளிநாடு பயணிக்கும் நபர்கள் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான ஆவணம் பாஸ்போர்ட். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளம், பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து […]

தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து […]

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு […]

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு […]

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது […]

மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் […]