நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்துடன் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக […]
tn government
அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது என தமிழக அரசு […]
தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]
தூத்துக்குடியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்து பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் […]
நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]
பள்ளி மாணவர்கள் எழுதிய முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு […]
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் […]
ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் […]
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிமுறைகள் கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள […]