முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி. மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக […]

மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மானியம் வழங்கப்படுகிறது. அதே எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி […]

மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, […]

கருணாநிதியை விட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு […]

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]

தமிழகத்தில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் […]