தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. […]

பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் […]

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி […]

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு ஆகிய இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்வுக்கு ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை […]

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]

தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025-2026ஆம் ஆண்டில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14.10.2025 அன்றும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15.10.2025 அன்றும் நடைபெறவுள்ளன. […]