மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும். […]
tn government
பருவமழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, […]
Denial of deed registration despite DTCP approval..? The important change brought by the government..!
Chief Minister Stalin issued 6 new announcements for Erode district..!
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2008-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி சர்வேயை நடத்தி முடித்துள்ளன; நடத்தி வருகின்றன. […]
If the stolen jewelry cannot be recovered.. the Tamil Nadu government should pay the compensation..!! – High Court verdict..
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணமாகவும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு […]
மழையில் நனைந்து சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே..? என் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட பயிர்களின் […]
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் […]

