திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் […]
Trichy
திருச்சி மாவட்டத்தில் கடந்த எட்டாம் தேதி காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தாப்பாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகன் பாஸ்கர் வயது 29. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். அதன் பிறகு வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேனி பள்ளம்காட்டுகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தன்னுடைய மகன்கள் அண்ணாவி (62), முருகேசன் (48), பெரியசாமி(45) உள்ளிட்ட மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார். அப்போது முருகேசனுக்கு விவசாய நிலத்தையும், மற்ற இருவருக்கும் நிலத்திற்கு பதிலாக பணத்தையும் கொடுத்து பாகப்பிரிவினை செய்தார். ஆனால் இதில் அண்ணாவி மற்றும் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற […]
திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்த இவர் பாதியிலேயே தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு 202-23 ஆம் […]
திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தார் அந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). இவருக்கு இரண்டு மனைவிகளும் 4 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர் இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக, குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது. ஆகவே மாணிக்கத்தின் 2வது மகன் கணேசன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் இடையில் சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இத்தகைய […]
திருச்சி பெரியார் நகரைச் சார்ந்த ஒருவருக்கு மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கியதால் படுகாயம் ஏற்பட்டது . இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிமாதிர்ச்சியை ஏற்படுத்தியது பட்டம் விடும் காலம் தொடங்கி விட்டாலே மாஞ்சா நூலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர் கதையாகி விடும். மாஞ்சா நூலில் பட்டம் விடுவதால் சாலையில் செல்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உயிருக்கியே ஆபத்து ஏற்படும் சூழல்கள் இருந்து வருவதால் மாஞ்சா நூலை வைத்து பட்டம் விடுவதற்கு […]
திருச்சி சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவை சேர்ந்தவர் முகமது பாபு என்கின்ற கண்ணன் (40) வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி சமீபா பேகம் (34) இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. […]
புதுச்சேரியில் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் திடீரென்று சரணடைந்திருக்கிறார்கள். அதாவது புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). மங்கலம் தொகுதி பாஜகவின் பொறுப்பாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் இருக்கின்ற பேக்கரி ஒன்றின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வந்த சில நபர்கள் அவர் மீது மாற்றி வெடிகுண்டை வீசியதுடன் […]