திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது 32. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் நேற்று […]

திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் சீனிவாசன் நகர் 7வது தெருவை சார்ந்தவர் சோலையப்பன். 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கும் இவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது சின்ன […]

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் பேசாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் சுற்றுபுரத்தை சார்ந்த பெத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன் இவரது மகன் கண்ணன் வயது 29. இவர் கட்டிடங்களில் சென்ட்ரிங் வேலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தனது நண்பர்கள் யாரும் […]

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டையில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்விற்காக பயணிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடி சார்ந்த 32 வயதான கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் கார்த்திக்கிற்கு […]

குழந்தைகளே இல்லை என்று எத்தனையோ தம்பதிகள் தவமாய் தவமிருந்து வரம் வாங்கி குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு கிடைத்த குழந்தை செல்வங்களை ஒரு சிலர் துச்சமாக எண்ணி அவற்றை குப்பை தொட்டிகளில் வீசிச் செல்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சி அருகே நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை எடுத்துள்ள புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் இருக்கின்ற குப்பை தொட்டி ஒன்றில் ஒரு குழந்தையின் அழுகுறல் கேட்டிருக்கிறது. அந்த வழியாக […]

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வன்னாங் கோவில் இன்னும் இடத்தில் தனியார் தார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு பொதுமக்களுக்கும் அவ்வப்போது உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலையை சுற்றி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு இந்த தொழிற்சாலையை மாற்றக்கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த தொழிற்சாலையில் இருந்து கடுமையான கரும்புகை […]

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் மற்றும் இலங்கை நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கான சுங்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது […]

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சார்ந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முஹம்மது அஜீஸ் மற்றும் விஜேஷ் மிஸ்ரா. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள மணிகண்டம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தனர். இருசக்கர வாகனத்தின் மூலம் தங்கள் அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இவர்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது திருச்சி மதுரை […]

திருச்சி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை குடி போதையில் இருந்த இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரத்தைச் சார்ந்த வாலிபர் விஜய் இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர். அவர்களின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதமாக […]

திருச்சியில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டி செல்வோரை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. திருச்சியில் காட்டூர் கணேஷ் நகர், ரோஜா தெரு பகுதியைச் சார்ந்தவர் உதயன் வயது 37. இவர் முன்தினம் இரவு 12 மணி அளவில் கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த இளைஞர் ஒருவர் இவரை இரும்பு கம்பியால் தலையில் […]