இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. […]

டொனால்ட் டிரம்பின் வலது கையில் ஏற்பட்ட காயம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் அவரது உடல்நிலை மற்றும் காரணம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திங்கள்கிழமை ஒவல் அலுவலகத்தில் (Oval Office) நடைபெற்ற நிகழ்வின் போது, டொனால்ட் டிரம்பின் வலது கையில் கருப்பு மற்றும் நீல நிறத்தில் காயம் தெளிவாகக் காணப்பட்டது. ரெசலூட் மேசையில் அமர்ந்திருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது இடது கையை வலது கையின் […]

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் (ஆகஸ்ட் 7) அமல்படுத்தப்படவுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து பெரும் கவலைகளை எழுப்பியது. இருப்பினும், தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. PHD வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) நடத்திய ஆய்வின்படி, இந்த வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.19% […]

அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் […]

சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]