உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]
uttar pradesh
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், நாட்டில் பல்வேறு நிலைகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், அவசரநிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல்களையும் நடத்துகிறது. தேர்தல்களின் போது, பல இடங்களில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாமலும் இருந்தால் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், உத்தரகண்டில் ஒரு […]
காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]
உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி […]
உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]
கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு […]
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள லால்குர்தியில் கெளஷல் ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் இனிப்பகம் ஒன்று உள்ளது. இந்த இனிப்பகத்தைச் சேர்ந்த சுபம் கௌஷல் என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்தக் கடையின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் ஆவார். சமோசாவை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான ஐடியாவைக் கண்டுபிடித்துள்ளார். அதன் வடிவில் உதயமானதுதான் இந்த 12 கிலோ சமோசா. அத்துடன் இந்த சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் மேற்கு பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் கிருஷ்ண பால் என்ற இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களுடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். அதோடு பூஜா ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கிருஷ்ணபால் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். […]
உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள தேவ்ராலா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சன் குமார் (27). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் டூ-விலர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் என்பவர் வீடு உள்ளது. கடந்த மே 14ஆம் தேதி காலையில், அச்சன் குமாரின் குழந்தை பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது சுரேந்திர பிரமுக் […]