நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]

தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் தற்போது நிலவும் கட்சி தாவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் […]

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]

இன்று ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய விஜய் எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை எல்லாம் திமுக அரசுக்கு கிடையாது.. 24 மணி நேரமும் விஜய்யை பற்றி தான் அவர்களுக்கு யோசனையே.. விஜய்யை எப்படி எதிர்க்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.. மணல் கொள்ளையை மட்டும் தொடர்ந்து […]

விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]