நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

robo sankar 2025

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடிமேல் அடி!. நெறிமுறைகளை மீறிய பாகிஸ்தான்!. நடவடிக்கை எடுக்க ICC பரிசீலனை!. என்ன நடந்தது?.

Fri Sep 19 , 2025
ஆசிய கோப்பை 2025 நெறிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.சி.சி பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 போட்டிக்கு முன்பு பல விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிசீலித்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற […]
asia cup super 4 pakistan

You May Like