ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்..
EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் கொள்ளலாம் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை நாம் பார்க்கலாம்.
இருப்புத் தொகையை சரி பார்ப்பதற்கான வழிமுறைகள்:
முதலில் இந்த https://www.epfindia.gov.in இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.பிறகு தளத்தில் “உங்கள் இபிஎஃப் இருப்பை அறிய EPF Balance” என்ற ஆப்ஷன் உள்ளே செல்லவும். அதன் உள்ளே சென்றவுடன் நீங்கள் இந்த புதிய பக்கத்திற்கு (https://www.epfoservices.in/epfo) சென்று விடுவீர்கள். பிறகு உறுப்பினர் இருப்பு தகவல்”(Member Balance Information) பகுதிக்கு செல்லவும். அடுத்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, இபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை பதிவு செய்யவும். இறுதியில் “Submit’’ என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பி.எஃப் இருப்பு தொகை உங்களுக்கு காண்பிக்கும்.
மொபைல் மூலம் சரி பார்ப்பது எப்படி…?
உங்களுடைய இருப்புத் தொகையை சரிபார்க்க, எஸ்.எம்.எஸ் அல்லது தவறவிட்ட அழைப்பு சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை சரிபார்க்க முடியும். எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் அல்லது சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN.’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு இபி.எஃப்.ஓ பதிலளிக்கும். மேலும் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் இபிஎஃப் இருப்பு நிலையையும் சரிபார்க்கலாம்.