எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு…! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடுத்தார்.

முதலமைச்சராக பதவி வகித்த பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச கோர்ட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Vignesh

Next Post

அந்த இடத்துக்கு வா இன்னியோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்...! உடன் வாழ மறுத்த காதல் மனைவியை கதறவிட்ட கணவர்....!

Mon Sep 25 , 2023
சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், பின்னர் குடும்பத்திற்குள் பிரச்சனை எழுந்துள்ளது. ஆகவே, அடிக்கடி இருவருக்கும் […]

You May Like