100 நாள் வேலை திட்டம் 125 நாளாக உயர்வு… மத்திய அரசின் முயற்சிக்கு அதிமுக ஆதரவு…!

100 days job 2025

மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியமும் உயர்த்தப்படும்” என்று அறிவித்திருந்தார். மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

அவர் பதிவிட்டிருந்த நீண்ட எக்ஸ் தள பதிவில் ஏன் இதை பற்றி எந்த குறிப்பும் இல்லை, இது போன்ற பச்சை துரோகத்தை செய்துவிட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

விஜய் வருகை... ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை...!

Thu Dec 18 , 2025
விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]
school 2025

You May Like