வியக்க வைக்கும் இந்தியப் பெருஞ்சுவர்.. பலருக்கும் தெரியாத மறைக்கப்பட்ட இடம்…

உலகின் அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் பற்றி நாம் அனைவரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்திய பெருஞ்சுவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? கேட்க ஆச்சர்யமாக இருக்கிறதா.. அதுதான் உண்மை..

பெருஞ்சுவர்

பல புராணங்களுக்கும் அழகியல் கட்டிடக்கலைக்கும் பெயர் போன நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்களை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கட்டடக் கலையை வியந்து பாராட்டுகின்றனர்.

ஆனால் இந்தியாவின் மறைக்கப்பட்ட பகுதி இங்கே உள்ளது. இது ஒரு சில பயணிகளுக்கு மட்டுமே தெரியும். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் அருகே ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்துள்ள கும்பல்கர் என்ற மலைக் கோட்டை உள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் ராணா கும்பாவால் கட்டப்பட்டது . சித்தோர்கர் கோட்டைக்கு அடுத்துள்ள மேவாரின் முக்கியமான கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.

கும்பல்கர் கோட்டை இந்தியாவின் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இந்த கோட்டையின் சுவர் கிட்டத்தட்ட 38 கி.மீ நீளம் கொண்டது. இது சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு இரண்டாவது மிக நீளமான சுவர் என்று கருதப்படுகிறது. கோட்டையின் சுவர்களும், அதன் கட்டடக்கலை அம்சங்களும் காண்போரை வியக்க வைக்கின்றன.. போர் வீரர்கள் எதிரிப் படைகளை குறிவைக்க வைக்கும் திறப்புகளைக் கொண்ட பலமான சுவர்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

சுவரின் பின்னால் 360 கோயில்கள் உள்ளன. அவற்றில் 300 பண்டைய சமண கோவில்கள் ஆகும்.. மீதமுள்ளவை இந்துக் கோயில்கள் ஆகும். கோட்டையின் உள்ளே இருக்கும் சிவன் கோவிலில் 5 அடி நீள சிவ லிங்கம் அதன் தனித்துவமான கல் வடிவமைப்பிற்கு பிரபலமானது.

இருப்பினும், கோட்டையில் மிகவும் குறிப்பிடத்தக்க அமைப்பு ‘பாடல் மஹால்’ ஆகும். குறுகிய படிக்கட்டுக்கு மேலே 2 மாடி அரண்மனை இரண்டு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஜனனா மஹால் மற்றும் அரச குடும்பத்தின் ஆண்களுக்கு மர்தானா மஹால். 19 ஆம் நூற்றாண்டின் பாணி ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த இடம் கலை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகவே கருதப்படுகிறது…

உலகின் இரண்டாவது மிக நீளமான சுவர் இந்தியாவில் உள்ளது. கோட்டையின் சூழ்நிலை மற்றும் அதன் பண்டைய கட்டடக்கலை கட்டமைப்புகள் வியக்க வைக்கிறது. ஆனால் இந்த கோட்டை மற்றும் அதன் பெருமை பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு சில பயணிகள் மற்றும் பூர்வீக மக்கள் மட்டுமே இந்த உண்மைகளை அறிந்திருக்கலாம், மற்றவர்களை பொறுத்தவரை இது ஒரு மறைக்கப்பட்ட இடமாகவே உள்ளது.

Maha

Next Post

தினமும் மிளகு சாப்பிடுவதால்... இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..

Fri Sep 9 , 2022
சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் சிறந்ததாக வீட்டில் இருக்கும் மசாலா பொருட்கள் கருதப்படுகின்றன… அதனால்தான் மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற பல மசாலாப் பொருட்கள் இந்திய வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மிளகின் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. மிளகில் உடலுக்கு நன்மை பயக்கும் பல பண்புகள் உள்ளன… அந்த வகையில், கருப்பு மிளகு உடலில் புண்ணிற்கும் நிவாரணம் அளிக்கிறது.. மிளகை, அரைத்து காயப்பட்ட இடத்தில் தடவினால், குறைந்த […]

You May Like