இன்று கூடுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் கூடுகிறது, கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது .
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். இறுதியில், அன்புமணியின் விருப்பப்படியே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதுவரைக்கும் ராமதாஸ் – அன்புமணி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்தக் கூட்டணி முடிவை அடுத்து மோதல் போக்காக மாறியது.
அதிமுகவில் வரும் 23-ம் தேதி விருப்ப மனு வழங்க கடைசி நாள் என்பதால், 24-ம் தேதி யார், யார், எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்துள்ளனர் என்ற மொத்த விவரமும் வெளியாகும். அதன்பிறகு, யாரை கீழே தள்ளலாம், எப்படி ‘சீட்’ பெறலாம் என்ற முட்டல், மோதல் நிகழ்வுகள் அதிமுகவில் வழக்கம்போல் கட்சித் தலைமைக்குப் புகார்கள் பறக்கும். இதனால், கட்சித் தலைமைக்கு வேட்பாளர் தேர்வில் நெருக்கடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கூடுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம்சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் கூடுகிறது, கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது .



