அமெரிக்காவை வழிநடத்துவதே எங்க இந்தியர்களின் மூளை தான்…! அண்ணாமலை அதிரடி பேச்சு…!

annamalai 1

இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சென்னை ஐஐடி மற்றும் ‘We The Leader Foundation’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவரும், அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய முயற்சியாக தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்கிறோம். இதனால், நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். விவசாயம் என்பது முற்றிலும் ஒரு புதிய துறை. தகவல் தொழில்நுட்பத்துறை வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ள பலரை, குறிப்பாகப் பெண்களையும் நாம் பார்க்கிறோம்.

விவசாயம் செய்ய வேண்டும் என்ற பலர் விரும்பினாலும் போதிய அளவு நிலம் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள இளையோர் வேளாண் ஊக்குவிப்பு திட்டம் விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நல்லதொரு தளத்தை ஏற்படுத்தி தரும். இங்கு வரும் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து கற்றுத்தருவார்கள். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே அவர்கள் மனதில் வேளாண் குறித்த சிந்தனையை ஏற் படுத்த வேண்டும். இதுதான் புதிய திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும்.

பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏ.ஐ., மாநாட்டில் பேசினார். அதனை எத்தனை பேர் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர் மூன்று விஷயங்களை டிரம்ப் முன் வைத்தார்.

அதில் முக்கியமாக இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று பேசியிருக்கிறார் டிரம்ப். அதுதான் நம் இந்திய நாட்டின் பலம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப் கூறியபடி, இந்தியர்களின் மூளையும், திறமையும் அவ்வளவு மதிப்புமிக்கது. இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும் என்றும், ஒரு ஏக்கர் வைத்துக்கூட விவசாயம் செய்ய முடியும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.

Vignesh

Next Post

1 முதல் 5-ம் வகுப்பு வரை... ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Sun Aug 3 , 2025
அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் […]
tn school 2025

You May Like