ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து வருகிறார்.. வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி கர்நாடகாவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்..
இந்திய ஜனநாயகத்தை அழித்த மக்களை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில், 6,018 வாக்குகளை நீக்க முயன்றனர்.. ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6,018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்ததாகக் கூறப்படும் நபர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை..
ஆலந்தில் வாக்குகளை நீக்க கர்நாடகாவிற்கு வெளியே இருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்த மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டன, குறிப்பாக காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து. இது தற்செயலானதல்ல.. இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. இந்த நீக்கங்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற வாக்குச் சாவடிகளை குறிவைத்தன என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.” என்று தெரிவித்தார்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான “கடுமையான” குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி, கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தேர்தல் ஆணையத்திற்கு “18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பி, தேர்தல் ஆணையத்திடம் சில எளிய உண்மைகளை கேட்டது.. இருப்பினும், தேர்தல் ஆணையம் தகவலைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது என்று ராகுல் காந்தி கூறினார்.
மகாராஷ்டிராவின் ராஜ்புரா தொகுதியில் தேர்தல்களின் போது 6,850க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, போலி பெயர்கள் மற்றும் முகவரிகளைப் பயன்படுத்தி போலி வாக்காளர்களை உருவாக்கியதாக காந்தி மேலும் கூறினார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ராகுல்காந்தி, தான் வெளியிட்ட ஒவ்வொரு அறிக்கையும் சரிபார்க்கக்கூடியதாகவும் ஆவண ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறினார். இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் புனிதத்தைப் பாதுகாப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார்.
Read More : நீங்க இந்த அட்டையை வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!!



