திமுக.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் சீமான், விஜய் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கூட்டணியை விரிவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போதைய கூட்டணியில் பாஜக மற்றும் தமாகா மட்டுமே உள்ள நிலையில், புதிய கட்சிகளை சேர்த்துக்கொள்ளும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக, தளபதி விஜய் தலைமையிலான தவெக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பக்கம் அதிமுக பார்வை திரும்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் திமுக.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் சீமான், விஜய் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். கட்சியினரை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும்.
தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.
Read more: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி முதல் சம்பள உயர்வு..? முழு விவரம் இதோ..