அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
அவரது பேட்டியில், “செங்கோட்டையன் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை. கட்சிக்காக எவ்வளவு உழைத்தவர். அத்தகையவரை நீக்கியிருக்கிறார் இபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தான்தோன்றி தலைவராக நடிக்கிறார், உண்மையான தலைவர் அல்ல. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி ஒரு டம்மி தலைவராக இருக்கிறார்; அவரை பின்னால் இருந்து வேறு சிலர் இயக்குகிறார்கள்.
செங்கோட்டையன் நீக்கம், ஜெயலலிதா, ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்பாகாது. இன்று எடப்பாடியை இயக்குவது தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் தான். அவர்கள் producer-கள்; இபிஎஸ் ஒரு operator மட்டுமே, என்றும் குற்றம்சாட்டினார்.
2026 தேர்தலை சுட்டிக்காட்டிய அவர், முதல் இடத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டி இருக்கும். எடப்பாடி பழனிசாமி நான்காவது இடத்திற்கே தள்ளப்படுவார். சீமான் கூட அவருக்கு போட்டியாக இருப்பார். இபிஎஸ்-ஐ பக்கத்தில் வைத்துக் கொண்டால் தோல்வியே அதிமுகவுக்கு நிச்சயம், என எச்சரித்தார். கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவுக்கு இபிஎஸ் போன்ற முட்டாள் பையன் தான் தேவை. அவர் இருப்பதால் திமுகக்கு வெற்றி உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்,” எனவும் தாக்கி பேசினார்.
செங்கோட்டையன், சின்னம்மா, ஓபிஎஸ் ஒன்று சேர்ந்தால் அதிமுக எங்களது கட்டுப்பாட்டுக்கு வரும். அதற்கான வாய்ப்பு 100 சதவீதம் உள்ளது. மக்கள் எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிப்பார்கள். அவர் அரசியலில் அனாதையாக போவார், என கடுமையாக தாக்கினார். இத்தகைய சூழலில் அதிமுகவின் உள்கட்சிக் கலகம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.