“குற்றவாளிகளுக்கு காவல்துறையை பார்த்து கொஞ்சம் கூட பயம் இல்லை.. முதல்வர் ஸ்டாலின் இதுக்கு யார் மீது பழிபோடப் போகிறார்? விளாசிய இபிஎஸ்!

Stalin EPS 2025

பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது..


அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 3 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாள் கொண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பல் வெள்ளைக் காளியை கொலை செய்ய வந்த கும்பல் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

எனினும் போலீசாரின் தோட்டாக்களில் இருந்து தப்பிய 10 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து 2 கார்களில் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

RUPA

Next Post

“ எனக்கு கிராமத்தில் வாழ பிடிக்கல..” திருமணமான இரண்டே மாதங்களில் புதுமணப் பெண் தற்கொலை..!

Sat Jan 24 , 2026
கலபுரகிக்கு அருகிலுள்ள ஆசாத்நகர் கிராமத்தில் புதிதாகத் திருமணமான அனுசுயா அவினாஷ் ஆகாடே என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கிராம வாழ்க்கையுடன் பழகிக்கொள்ள அவர் சிரமப்பட்டதாகவும், நகர வாழ்க்கையை விரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் பெங்களூரில் பணிபுரிந்த ஒரு பி.எஸ்சி பட்டதாரி ஆவார். கலபுரகி நகரின் புறநகரில் உள்ள ஆசாத்நகர் கிராமத்தில் 26 வயதுடைய புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் […]
karnataka woman

You May Like