கடலோர மாவட்டங்களில் வரும் 3 மற்றும் 4-ம் தேதி மழை…! வானிலை மையம் தகவல்…! ‌‌

கடலோர மாவட்டங்களில் 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழக கடலோர மாவட்டங்களில் 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#Breaking: டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 3.8 ஆக பதிவு...!

Sun Jan 1 , 2023
டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியா புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், ஜனவரி 01, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 1:19 மணி அளவில் டெல்லி அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூட்டம் புத்தாண்டை கொண்டாடும் போது இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா, நொய்டா போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு காயம் ஏற்பட்டதாக […]

You May Like