அதிமுக கூட்டத்திற்கும் திமுக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை…! இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!

EPS ambulance new

163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல் துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தருமபுரியில் பேசிய அவர்; கரூரில் செப்டம்பர் 27-ம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல் துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல் துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.

இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர், விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத் தான் பேச முடியும். இவ்வளவு பிரச்சினை நடந்துவிட்டது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.

இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்தியிருக்கிறது. எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது. ஓர் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் 163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல் துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால், ஆளே இல்லாத பகுதியில் கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்புக் கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

Vignesh

Next Post

ஷாக்!. பச்சிளம் ஆண் குழந்தை வயிற்றில் இருந்த சிசு!. கர்நாடகாவில் அபூர்வ நிகழ்வு!. மருத்துவர்கள் ஆச்சரியம்!.

Fri Oct 3 , 2025
கர்நாடக மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (KMCRI) சமீபத்தில் ஒரு அரிய மருத்துவ நிலையில், ஒரு ஆண் குழந்தை தனது உடலுக்குள் மற்றொரு கருவுடன் பிறந்தது. கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். பிரசவத்துக்காக, ஹூப்பள்ளியின் அரசு சார்ந்த, ‘கிம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் […]
karnataka rare medical conditions

You May Like